நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து சென்ற மாற்றுத்திறனாளி உயிரழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாற்றுதிறனாளி பிரபாகரன் என்பவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனின் மரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் பிரபாகரன் மரணத்தில் மர்மம் நிலவுவதாகவும் சிபிசிஐடி விசாரணை தேவை என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பிரபாகரன் மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.