பொங்கல் வைப்பதில் தகராறு..! இளைஞர் அடித்துக் கொலை! – 5 பேர் கைது!

திங்கள், 17 ஜனவரி 2022 (09:49 IST)
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திரிபுவனம் அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமத்தில் கடந்த 15ம் தேதி இரவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ரவி தன்னை கேட்காமல் பொங்கல் வைத்தது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கருப்பசாமிக்கும், ரவிக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ரவியின் மகன்கள் ஆயுதத்தால் கருப்பசாமியையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரவி மற்றும் அவரது மகன்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்