இன்று தலைமைச்செயலகம் சென்ற முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (17:38 IST)
தமிழக முதலமைச்சர் பதவியை கடந்த 5-ஆம் தேதி ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது காபந்து முதல்வராக நீடித்து வருகிறார். அதன் பின்னர் இன்று மீண்டும் தலைமைச்செயலகம் சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம்.


 
 
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பின்னர் இன்று தலைமைச்செயலகம் சென்ற முதல்வருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
 
தலைமைச்செயலகம் சென்ற முதல்வரை தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் சந்தித்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.
 
பின்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹாசினி பாலத்கராம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சில உத்தரவுகளை பிறப்பித்தார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
 
மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த முதல்வர் இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்