ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெய்யை குடித்த குழந்தை! – முசிறியில் சோகம்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:55 IST)
முசிறி அருகே வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஜூஸ் என நினைத்து குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி அருகே உள்ள காமாட்சிபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தையும் உள்ளது. கடந்த ஜனவரி 3ம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஜீவா அங்கிருந்த மண்ணெண்ணெய்யை ஜூஸ் என நினைத்து குடித்துள்ளான்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுகன்யா உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தை ஜீவாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்