சளி மருந்து குடித்த குழந்தை மரணம்; தாயார் மீது கொலை வழக்கு!

செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:53 IST)
திருப்பூரில் 5 வயது குழந்தைக்கு சளி மருந்து கொடுத்து கொலை செய்ததாக குழந்தையின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் அவினாசி சாலையில் குப்பை தொட்டி அருகே 5 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் குழந்தையுடன் சுற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து விசாரித்ததில் அவர் பெங்களூரை சேர்ந்த மருத்துவர் சைலஜா குமாரி என தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்த சைலஜா தனது 5 வயது குழந்தையுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். திருப்பூருக்கு வேலை தேடி வந்த அவர் குழந்தை வாந்தி எடுத்ததால் பேருந்தை விட்டு இறங்கியுள்ளார். பின்னர் குழந்தைக்கு சளிக்கு கொடுக்கும் மருந்தை முழுவதுமாக கொடுத்துள்ளார். இதனால் மயங்கிய குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு தானும் எலி மருந்து சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக சைலஜா குமாரியை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சளி மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சைலஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்