உண்மையான தேசிய ஹீரோ - நீரஜுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சனி, 7 ஆகஸ்ட் 2021 (18:40 IST)
ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு  ஹரியான மாநில அரசு பரிசுத் தொகை  அறிவித்துள்ளது நிலையில் முதல்வர் ஸ்டாலின் நீரஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியா சார்லில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளிர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.

இந்நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்க மகன் நீரஜுக்கு  தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

மேலும், இன்று சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்ற்னர்.

இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனை நீரஜ் சோப்ராவால் இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா  ஒலிம்பிக் அதெலெட்டிக்கில் முதல் தங்கம் வென்று சாதித்துள்ளது. இது கோடிக்கான மக்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நீரஜ் சோப்ரா உண்மையான ஓர்  தேசிய வீரர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

A remarkable day in the history of Indian Sports. My heartiest congratulations to @Neeraj_chopra1 for ending the 120 year wait of India to win an #Athletics #Gold medal in #Olympics. You've instilled a new sense of hope in a billion hearts. You are truly a #NationalHero. pic.twitter.com/QXAvOxKEgO

— M.K.Stalin (@mkstalin) August 7, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்