உள்ளாட்சித் தேர்தல் - ஆயத்தமாகும் திமுக!!

சனி, 7 ஆகஸ்ட் 2021 (14:41 IST)
உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என கழகம் சார்பில் அறிவிப்பு. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன. 
 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என கழகம் சார்பில் அறிவிக்கபப்ட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்