தமிழகத்தில் தியேட்டர் திறப்பு? தியேட்டர் உரிமையாளர்கள் இன்று ஆலோசனை!

சனி, 7 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
தியேட்டர்களை திறக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து உரிமையாளர்கள் இன்று ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளனர். 

 
தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலேயே கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மாதம் முழுவதும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
 
இதனால் தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியாகியுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இன்று காணொலியில் ஆலோசனை நடத்துகின்றனர். 100 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் ஆலோசிக்க உள்ளனர். தியேட்டர்களை திறக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து உரிமையாளர்கள் ஆலோசித்து முடிவு எடுப்பர் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்