24 மணி நேரத்தின் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

சனி, 7 ஆகஸ்ட் 2021 (13:31 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. 
 
அத்னபடி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்