முதல்வர் ஸ்டாலின் நேரில் வருகை !

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (16:02 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையில் சுமார் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் திறந்து வைத்துப் பார்வையிட உள்ளார்.

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை9 11 ஆம் தேதி) மாலை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சேலம் கமலாபுரம் வரவுள்ளார். வாருக்கு திமுக கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரவுள்ளார்.  அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.

இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சேலம் இரும்பாலையில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பு சிறப்பு மையத்தை பார்வையிடுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்