கழிவறையில் விடப்பட்ட தாய்... சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையால் மீட்பு

வியாழன், 10 ஜூன் 2021 (10:23 IST)
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரின் துரித நடவடிக்கையால் பரிதபமான நிலையில் கழிவறையில் விடப்பட்ட தாய் மீட்பு.

 
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் துரித நடவடிக்கையின் பேரில், சேலம் மாவட்டம் சமூக நலதுறையின் அதிகாரி திருமதி.கிருத்திகா அவர்களின் ஆலோசனை ஏற்று போதிமரம் நிர்வாகிகள், சேலம் டால்மியா போர்டு பழைய அவுசிங்போர்ட்டு, பகுதியில், மிகவும் பரிதபமான நிலையில், திருமதி்.ராதா (95) வயது மதிக்கத்தக்க, 4  மகன்களை பெற்றும், மழையிலும், வெயிலிலும், உணவின்றி, தண்ணீரின்றி கவனிப்பார் அற்ற நிலையில் வயது முதிர்ந்த தாயை, கழிவறையில், ஈவு இரக்கமற்ற நிலையில் பல நாட்களாக தவித்த வந்த அத்தாயின் நிலையை கண்டு பார்த்தவர்களுக்கு கண்ணீர் மல்கியது.
 
இக்கொடுமை பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரித நடவடிக்கையால், மாவட்ட சமூக நலதுறை ஆலோசனை ஏற்று, போதிமரம் நிர்வாகிகளால் மீட்டு எடுக்கப்பட்டது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த தாயின் நிலையறிந்து, தகவல் கொடுத்து ஒத்துழைப்பு அளித்த, செட்டிசாவடி அங்கன்வாடி ஆசிரியர் அவர்களுக்கும், டால்மியா போர்டு மேலாளர் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிக்க நன்றி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்