முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (21:59 IST)
தமிழக முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின்  தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளைத் தடுத்திட வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மாண்புமிகு முதலமைச்சர்  ஸ்டாலின்  அவர்கள், மாண்புமிகு பிரதமர்  மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2018 க்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையில்  பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தபப்ட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் அவசரமாகத் தலையிட வேண்டுமென  இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்