மோடி தொகுதி வாரணாசியிலும் வாக்காளர் மோசடியா? ஒரே தந்தைக்கு 50 மகன்கள்?

Mahendran

புதன், 13 ஆகஸ்ட் 2025 (10:50 IST)
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில், வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் 51வது வார்டு காஷ்மீரிகஞ்ச் பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில், 50க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே தந்தை பெயர் "ராம்கமல் தாஸ்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில், இளையவருக்கு 28 வயதும், மூத்தவருக்கு 72 வயதும் உள்ளதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  
 
இதுகுறித்து விசாரணை செய்தபோது, வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் ஆச்சார்ய ராம்கமல் தாஸ் என்பவரால் நிறுவப்பட்ட "ராம் ஜானகி மடம்" என்ற கோயில் இருப்பது தெரியவந்துள்ளது. 
 
கோயிலின் தற்போதைய மேலாளர் ராமபரத் சாஸ்திரி இதுகுறித்து விளக்கமளித்தபோது  "எங்கள் மடம் ஒரு குருகுலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி உள்ள சீடர்கள், உலக வாழ்க்கையை துறந்தவர்கள். அவர்கள் தங்கள் குருவையே தந்தையாக கருதுவதால், வாக்காளர் பட்டியலில் குருவின் பெயர் தந்தையின் பெயராக பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
 
இந்த விளக்கம் ஏற்கப்படும் வகையில் இருப்பதால் காங்கிரஸ் குற்றச்சாட்டு பிசுபிசுத்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்