சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் மனமில்லை: அன்புமணி ராமதாஸ்!

Mahendran

வியாழன், 11 ஜனவரி 2024 (17:35 IST)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் மனமில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில் ’200 ஆண்டுகளாக ஜாதியை வைத்து தான் அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சாதியை வைத்து தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளையர்கள் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பின் படி தான் தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். சாதிகள் எத்தனை? அதில் மக்கள் எத்தனை என தலை கணக்கை எடுக்க சொல்லவில்லை. ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் முதல்வருக்கு மனம் தான் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்