தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை - கண்ணூர் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (15:04 IST)
தமிழ் புத்தாண்டு தின விடுமுறையை கொண்டாட வெளியூர் செல்லும் பொது மக்களின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயிலாக சென்னை - கண்ணூர் இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல்.13-ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06047) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சந்திப்பை சென்றடையும். மறுமார்க்கமாக, கண்ணூரில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி காலை 8.35 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06048) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். 
 
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்புக் கட்டண ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்