தமிழகத்தின் பல மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக மழை குறையும் என்றும் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மழை குறித்த அப்டேட்டை பதிவிட்டுள்ளார். அதில், மிகவும் வித்தியாசமான வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வருகிறது. எப்போதும் போல இரவில் இருந்து காலை வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும்.