திமுக எம்.எல்.ஏ. வீட்டில் ஜிஎஸ்டி ரெய்டு..

Arun Prasath

புதன், 4 டிசம்பர் 2019 (10:20 IST)
செங்கல்பட்டு சட்டமன்ற உருப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏவான வரலட்சுமி மதுசூதனன் மேன் பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரிடம் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து மறைமலை நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல இடங்களில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்