பெண்ணின் மூக்கு வழியாக மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சி

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (19:01 IST)
சென்னை ஈஞ்சப்பாக்கத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி செல்வி(வயது 42).


 

இவர் கடந்த சில தினங்களாக மூக்கில் எரிச்சல் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருந்துகள் கொடுத்தும் வலி குறையவில்லை. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவரது மூளைக்கு கீழ் பகுதியில் ஒரு கரப்பான் பூச்சி உயிருடன் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து நவீன முறையில் அந்த கரப்பான் பூச்சியை உயிருடன் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
அடுத்த கட்டுரையில்