சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் மீண்டும் செயல்பட அனுமதி!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (11:52 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரிகள் இயங்க மத்திய அரசு தடைவிதி தந்த நிலையில் தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்பட தடையில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கி உள்ளது. 
 
இரு கல்லூரிகளில் இருந்த குறைகளை சரி செய்து விட்டதாகவும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை மாநில அரசை நடத்த அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார் 
 
தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ததாகவும் இந்த ஆய்வுக்கு பின்னர் திருப்தி அடைந்த அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்