ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு! – பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (17:31 IST)
தென்னிந்திய ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு செய்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய ரயில்வேயின் சென்னை மண்டலங்களில் சரக்கு ரயில்களின் சேவை அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சரக்கு ரயில்களில் உள்ள பொருட்களை எலிகள் நாசம் செய்வதால் அதிகமான இழப்பு ஏற்பட்டு வந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டுள்ள தகவலில் கடந்த நான்கு ஆண்டுகளில் எலிகளை பிடிப்பதற்காக சுமார் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சென்னை மண்டலம் தகவல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் சென்னை மற்றும் சுற்றுவட்டார ரயில் நிலையங்களில் 2363 எலிகளை பிடித்துள்ளார்களாம். அதில் 1700க்கும் அதிகமான எலிகள் சென்னை செண்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் பிடிக்கப்பட்டிருக்கின்றனவாம். கணக்குப்படி ஒரு எலியை பிடிக்க சுமார் 22000 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எலிகளால் விளைந்த சேதத்தை விட அவைகளை பிடிக்க ஆன செலவு மிக குறைவானதே என ரயில்வே அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்