நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (21:54 IST)
நாளை முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை அரசு பொது விடுமுறை கால அட்டவணையின்படி காலை ஐந்து மணி ஐந்து முப்பது மணி முதல் இரவு 11 மணி வரை நீடிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் 
 
இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் பிரதீப் யாதவ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்