தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (12:58 IST)
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிவிட்ட நிலையிலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னையை பொறுத்தவரை மாலையில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்