அடுத்த 3 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:03 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் கீழடுக்கு சுழற்சி மற்றும் ஒரு சில காரணங்களால் பிப்ரவரி 28 முதல் மார்ச் இரண்டாம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
அந்த வகையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் நாகப்பட்டினம் திருவாரூர் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட மற்ற பகுதிகளில் இன்றும் வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் கூடுதல் ஆன வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்