தமிழகத்தின் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திங்கள், 27 பிப்ரவரி 2023 (14:57 IST)
தமிழகத்தின் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாடு, புதுச்சேரி – காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும். நாளை மற்றும்  நாளை மறு நாள்( 01-03-23) தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அங்கு அதிபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 21-22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்