’சென்னையில் மனைவிக்கு சுய நினைவு இழப்பு’- பாகிஸ்தான் முன்னாள் வீரர் உருக்கம்

திங்கள், 27 பிப்ரவரி 2023 (20:42 IST)
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவ்வப்போது, கிரிக்கெட் வீரர்கள் பற்றி கருத்துகள் கூறி வரும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

அதில், 2009 ஆம் ஆண்டு என் மனைவியுடன் சிங்கப்பூர் செல்லும்போது, விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிறக்கப்பட்டது.

அப்போது, என் மனைவி திடீரென்று சுய நினைவை இழந்தார். அந்தச் சூழ் நிலையில், என்னிடம் இந்திய விசாவும் இல்லை; சென்னை விமான நிலைய அதிகாரிகள், விசா வேலைகளை நாங்கள் பார்க்கிறோம்…உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினர். நான் அழுதுவிட்டேன்…..அந்த நாளை என் வாழ் நாளில் எப்போதும் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவரது சுய சரிதை புத்தகமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்