6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:23 IST)
தமிழகத்தில் பெய்யக்கூடிய மழை குறித்த தகவல்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவண்ணாமலை செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. ஏனைய  வட மாவட்டங்கள் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்களாக சேலம் கிருஷ்ணகிரி வேலூர் திருவள்ளூர் நீலகிரி ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நாளை நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், ஜூன் 29 மற்றும் 30 உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும், ஜூலை 1ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்