தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜூலை 29ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை.
தென் மாவட்டங்கள்: தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.
மேற்கு மாவட்டங்கள்: கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி.