சென்னை மதுரை தேஜஸ் ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் நிலையில் தற்போது கூடுதலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சென்னை மதுரை இடையில் ஆன சூப்பர் பாஸ்ட் தேஜஸ் ரயில் தினமும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயில் மதுரைக்கு 6:15 மணி நேரத்தில் அதாவது 12.15க்கு மதுரை சென்று விடும்
இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை நின்று சென்ற தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே துறை இனி தாம்பரத்திலும் தேஜஸ் ரயில் நிற்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.