பிரதமர் அவைக்கு வர உத்தரவிட முடியாது: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில்

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (13:37 IST)
பிரதமர் அவைக்கு வர உத்தரவிட முடியாது என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில் அளித்துள்ளார்.
 
பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து தான் வழங்கியுள்ள நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தெரிவித்த நிலையில் அவருக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில் அளித்தார்.
 
அந்த பதிலில் அவர் கூறியபோது, ‘பிரதமரை அவைக்கு வர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. அவைக்கு வருவது, மற்றவர்களை போலவே பிரதமரின் தனிப்பட்ட உரிமை.
 
பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டால், அது நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறும் செயல் என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்விக்கு, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்