முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முறைகேடு வழக்கு: ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு..!

புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:00 IST)
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு   வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்னும் 6  வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால், தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நிறுவனங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை  தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்