8 ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் முடிக்காத மாணவர்கள்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:16 IST)
எட்டு ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் படித்து முடிக்காத மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மருத்துவ படிப்பை முடிக்காத மாணவர்கள் மாணவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது. 
 
இந்த நிலையில் நீக்கப்பட்ட ஐந்து பேர்  தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்க போறேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
8 ஆண்டுகளுக்கு மேல் வாய்ப்பளித்தும் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்காத மாணவர்கள் மாணவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்