அதிமுக பொதுக்குழு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (11:12 IST)
அதிமுக பொது குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொது குழுவின் வழக்கில் ஓபிஎஸ்-இன் அனைத்து மனுகளும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது 
 
அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு தடை இல்லை என்று தீர்ப்பு வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவுகள் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுக பொது குழு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுவதாக ஓபிஎஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்