சட்டமன்றத்தில் ஏற்படும் மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்று கூற முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை வரவேற்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சசிகலா சட்டமன்றத்தில் மக்களுக்காக மக்களின் பிரச்சனைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களின் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம், அவர் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு நான் சொல்வதால் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்