முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம்

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (11:39 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
திண்டிவனம் காவல் நிலையத்தில்  பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில்  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த வழக்கின் விசாரணையின்போது, ‘மனுதாரரின் பேச்சு மோசமானது தான், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அதற்காக இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்