அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கு: அதிரடி தீர்ப்பு..!

Mahendran

புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:32 IST)
அமைச்சர்கள்  கேகேஎஸ்எஸ்ஆர், ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்களை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மேலும் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், ராமச்சந்திரன் மற்றும் தென்னரசு ஆகியோரின் மீதான குற்றச்சாட்டினை பதிவு செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 11ஆம் தேதி அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னதாக வருமானத்தை மீறி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கினை  விசாரித்த நிலையில் இருவரது விடுதலையை ரத்து செய்து விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்