திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை சார்பில் கோரப்பட்டது குறித்தி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டியலின சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி பேசியதாக சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கில் கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் “ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மாநில அரசுகள் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன என சுட்டிக்காட்டிய நீதிமன்றம் மனு மீதான விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.