கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளையும், கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ”சென்னையை பொறுத்தவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதால்தான் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்புவது போல அரசியல் செய்ய இது நேரம் அல்ல. மக்கள் நலனை கவனத்தில் கொண்டு உயிரையும் பொருட்படுத்தாமல் பலர் உழைத்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளில்தான் உள்ளது, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.