கிண்டியில் ரஜினிகாந்த் மனைவி நடத்தி வந்த ஆஸ்ரம பள்ளிக்கு வாடகை செலுத்தாத விவகாரத்தில் ஏப்ரலுக்குள் கட்டிடத்தை காலி செய்து வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவில் லதா சென்னையில் கிண்டியில் உள்ள வணிக கட்டிடத்தில் ஸ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனம் பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பல மாதங்களாக லதா ரஜினிகாந்த் வாடகை பாக்கி தரவில்லை என கட்டிய உரிமையாளர் பூர்ணசந்திரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் முன்னரே லதா கட்டிடத்தை காலி செய்து வெளியேற உத்தரவிட்ட நிலையில், உடனடியாக இட மாற்றம் செய்ய இயலாது என லதா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் 2021 ஏப்ரல் மாதம் வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில் கட்டிடத்தை காலி செய்யாமல் 2021 -2022ம் ஆண்டிற்கான அட்மிஷனை நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.