தீபா கைக்கு சென்ற வேதா இல்லம்; மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (11:34 IST)
அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்ட வேதா இல்லம் தற்போது தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக மேல்முறையீடு செய்ய உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் அவர் வாழ்ந்து வந்த வேதா இல்லத்தை அரசுடமையாக்கி கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர் தீபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வேதா இல்லத்தை தீபாவிடமே ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக பிரபலங்கள் பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்