சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி: தொடங்கும் தேதி அறிவிப்பு..! கட்டணம் எவ்வளவு?

Siva
வியாழன், 11 ஜனவரி 2024 (07:23 IST)
சென்னை நந்தனம்  ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் உள்ள தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும் என்பதும் அதன்படி இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி ஜனவரி 12 முதல் தொடங்கும் என்றும் இந்த பொருட்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடக்க நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் அதாவது ஜனவரி 12, 13 தேதிகளில் கட்டணம் இன்றி  பொருட்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் 14 ஆம் தேதி முதல் பெரியவர்களுக்கு 40 ரூபாய் சிறுவர்களுக்கு 25 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐந்து வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொருட்காட்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்