சென்னையில் காலையிலேயே மது அருந்திவிட்டு முழு போதையில் சுற்றிய ஆசாமி ஒருவர் புதுப்பேட்டை பாலத்திலிருந்து கூவம் ஆற்றிற்குள் குதித்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீஸார் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் மது போதையில் அந்த ஆசாமி கூவம் ஆற்றிற்குள்ளேயே நீந்துவதும், உள் நீச்சல் போடுவதுமாக இருந்துள்ளார்.