சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்… ஒரு மணிநேரம் போலிஸுக்கு தண்ணிகாட்டல்!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:54 IST)
சென்னை புதுப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் ஒரு மணிநேரமாகக் கரைக்கு வராமல் போலிஸாரை அலையவிட்டார்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டை அருகே கூவம் ஆற்றில் ஒருவர் குதித்துவிட்டதாக போலிஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அந்த நபரோ ஜாலியாக அதில் நீந்திக் கொண்டு இருந்துள்ளார். போலிஸார் எவ்வளவோ கூப்பிட்டும் அவர் கரைக்கு வர சம்மதிக்கவில்லை.

இதையடுத்து போலிஸார் படகில் அவரைத் துரத்த நீந்தியே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சென்ற அவர் சிந்தாதிரிப் பாலத்தை அடைந்தார். அங்கு காத்திருந்த போலிஸார் உள்ளூர் மக்களின் உதவியால் அவரைப் பிடித்தனர். மதுபோதையில் இருந்த அவர் ஆடை கூட இல்லாமல் இருந்ததை அடுத்து அவருக்கு மாற்று ஆடை கொடுத்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்