2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிஎஸ்கே பந்து வீச்சாளரான தீபக் சஹார் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களும் அடக்கம். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
இதையடுத்து அடுத்தடுத்த நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளிலும் தீபக் சஹாருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததால் அவர் அணியினரோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கெய்க்வாட்டுக்கோ இரண்டாவது சோதனையில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதால், அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.