கொசுக்களை உற்பத்தி செய்தால் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
மழைக் காலம் தொடங்கி விட்டாலே கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி வரும் நிலையில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது
 
அந்த வகையில் கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் இடங்களில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்த அறிவிப்பு ஒன்றையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியில் கூறியிருப்பதாவது
 
கொசு உற்பத்திக்கு காரணமான இடங்களின் உரிமையாளர்களுக்கு முதல் மூன்று முறை குறைந்தபட்சம் 100, மற்றும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
 
குறு  சிறு கடைகளுக்கு 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் வரையும் ஆயிரம் மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும் 5 ஆயிரம் சதுர அடிக்கு குறைவான புதிய கட்டுமான இடங்கள் உள்ள பகுதிகளில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும், உணவகங்களுக்கு  5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையும் வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் தொழிற்சாலைகளுக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும் 150 படுக்கைக்கு மேல் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் 
 
 இந்த அபராதம் விதிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்