ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:46 IST)
நாளை அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் எதிர்காலத்தில் ராமர் கோவில் எப்படியிருக்கும் என்ற எக்ஸ்க்ளூசிவ் படங்கள் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக பலர் தங்கம், வெள்ளி போன்றவற்றையும் நன்கொடையாய் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி முழுவதுமாய் முடிவடைய மூன்றரை ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவில் எப்படி இருக்கும் என்ற கிராபிக் புகைப்படங்களை ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு வெளியிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நாளை பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

ராமர் கோவில் கட்ட வேண்டும் என 1992-ல் ஜெயலலிதா பேசியுள்ளார். இந்நிலையில் நாளை அயோத்தியில் ராமர் கோவில் பூமிபூஜை சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்து  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்