மொத்த தமிழகத்தையும் தாண்டிய சென்னை! – அதிகரிக்கும் பாதிப்புகள்!

Webdunia
சனி, 9 மே 2020 (11:11 IST)
தமிழகத்தின் மொத்த பாதிப்பை விடவும் சென்னையின் பாதிப்பு அதிகமாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முக்கியமாக சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இன்றைய நிலவரப்படி சென்னையில் இதுவரை 3,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இராயபுரம், அண்ணா நகர், திருவிக நகர் போன்ற இடங்களில் பாதிப்பு அதிகம் இருந்தாலும் தற்போது கோடம்பாக்கம் சென்னையிலேயே அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மண்டலமாக மாறியுள்ளது.

தற்போது கோடம்பாக்கத்தில் 546 பேரும், இராயபுரத்தில் 490 பேரும், திரு.வி.க நகரில் 477 பேரும், தேனாம்பேட்டையில் 343 பேரும், வளசரவாக்கத்தில் 256 பேரும் என சென்னை முழுவதும் மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்