சென்னையில் பஸ்-டே அட்டகாசம்: கூரையில் இருந்து கொத்தாக விழுந்த மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (08:30 IST)
ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி திறக்கும் தினத்தில் புதியதாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும் பழைய மாணவர்களும் சேர்ந்த பஸ்-டே கொண்டாடி வருவது வழக்கம். இந்த தினத்தின்போது கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. பெரும்பாலான மாணவர்கள் கூரை மேல் ஏறி கோஷமிட்டு வருவது அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் இருக்கும்
 
இந்த நிலையில் நேற்று கல்லூரி திறந்ததை முன்னிட்டு ஒருசில கல்லூரி மாணவர்கள் பஸ்-டே கொண்டாடினர். பஸ்ஸின் கூரை முழுவதையும் ஆக்கிரமித்த மாணவர்கள் கத்தி கொண்டே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூரையில் இருந்து சாலையில் கொத்தாக விழுந்தனர். இதில் ஒருசில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது
 
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகள் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசையில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பஸ்டே என்ற பெயரில் மாணவர்கள் அட்டகாசம் செய்து அவர்களுக்கு மட்டுமின்றி பயணிகளுக்கும், சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஆபத்தை உருவாக்குகின்றனர். கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து இந்த பஸ்-டே கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்