சென்னையில் கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (08:51 IST)
சென்னை அம்பத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோர்கள் கண்டித்ததால் தூக்கில் தொங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னை அம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீதர் என்பவரின் மகள் பத்மாவதியை தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வருகிறார். தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வுக்கு படிக்காமல் எப்பொழுதும் செல்போனில் அவர் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர் 
 
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பத்மாவதி திடீரென தனது அறையில் தூக்கில் தொங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
போனில் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவியால் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்