சென்னை பிராட்வே பேருந்து நிலையம் திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (16:48 IST)
சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிராட்வே பேருந்து நிலையம் திடீரென தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது பிராட்வே பேருந்து நிலையமும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
 
பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக சென்னை தீவு திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மல்டி மாடல் இன்டெக்கரேஷன் என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதற்காக அடிப்படை வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது
 
சென்னை பிராட்வே அருகில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிகவளகம் கட்டப்பட உள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் பேருந்து நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் ஏழு நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்