சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3,000 கோடிக்கு மோசடியா? வருமான வரி சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (16:25 IST)
சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை செய்வதில் 3000 கோடி கணக்கு காட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் திருச்சி உறையூர் சாரபதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை திருச்சி ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் 3000 கோடி கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்